வெம்பக்கோட்டை
தொல்லியல் தளம்:
தமிழக
அரசின் தொல்லியல் துறையால் வெம்பக்கோட்டையில் நடந்த இரண்டாம் கட்ட அகழாய்வின் போது
இரண்டு தங்கத் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இது
விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகே உள்ளது.
இங்கு
1.15 மீ முதல் 1.59 மீ வரையிலான ஆழத்தில்
தங்கப் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
இதில்
ஒரு தங்கத் துண்டு கூம்பு வடிவத்திலும் மற்றொன்று செவ்வக வடிவத்திலும் கிடைத்துள்ளது.
இந்த
இரண்டாம் கட்ட அகழாய்வின் போது
தந்தத்தால் ஆன பகடை, டெரகோட்டா
(களிமண்) புகைக்கும் குழாய், காதணி மற்றும் கல்லாலான எடைக் கல் ஆகியவையும் கண்டுடெக்கப்
பட்டன.
சோழர்
காலத்து கலைப்பொருட்கள்:
வடக்குப்பட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மன்னர் இராஜ இராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த சோழர் கால நாணயம் உட்பட கிட்டத்தட்ட 400 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே
அமைந்துள்ளது.
இரண்டாம்
கட்ட அகழாய்வின் கண்டுபிடிப்புகளில் கி.பி. 9 மற்றும்
கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட
சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு நாணயங்களும் உள்ளடங்கும்.
இந்த
நாணயங்களுள் ஒன்று இராஜ இராஜ சோழன்
காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஒரு
செப்பு வில், செப்பு மூடி, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்களும் இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் கத்திகள் மற்றும் கோடாரிகள் போன்ற இரும்புக் கருவிகள், கர்னேலியன் மணிகள், பானைகள் மற்றும் கல்லால் ஆன பாக்கு வெட்டிகள் ஆகியவை கீழ்நமண்டியில் உள்ள அகழ்வாராய்ச்சித் தளத்தில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சித்
தளத்தில் இரும்புக் காலத்தின் பிற்பகுதியில் மனிதக் குடியிருப்புகள் இருந்ததை இது குறிக்கிறது.
இக்குழு
அந்த இடத்தில் 12 செவ்வக வடிவ கல்லால் ஆன
சவப்பெட்டிகளையும் கண்டு பிடித்துள்ளது.
இங்கு
கறுப்பு சிவப்பு மட்பாண்டம் மற்றும் செம்பூச்சு மட்கலன்கள் அதிக அளவில் கண்டு
பிடிக்கப்பட்டதன் மூலம் இந்தத் தளம் இரும்புக் காலத்தைச்
சேர்ந்தது எனலாம்.
திருவண்ணாமலையில்
உள்ள வந்தவாசி நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் கீழ்நமண்டி
அமைந்துள்ளது.
ஒற்றைக் கல் மற்றும் பெருங்கற்காலப் புதைவிடங்கள்:
தமிழ்நாடு
மாநிலத் தொல்லியல் துறையானது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடு மணல்
என்னுமிடத்தில் அமைந்துள்ள ஐந்து 'மென்ஹிர் (ஒற்றைக் கல்) மற்றும் பெருங்
கற்காலப் புதைவிடங்களைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.
கொடுமணல்
எனுமிடமானது நொய்யலாற்றின் வடக்குக் கரையில் ஈரோட்டில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில்
உள்ளது.
ரோமானிய
வெள்ளி நாணயங்கள், விலையுயர்ந்தக் கற்கள் மற்றும் குவார்ட்ஸ் கற்கள் ஆகியவற்றோடுச் சேர்த்து, தமிழ்-பிராமி மொழியின் எழுத்து வடிவங்களில் பொறிக்கப் பட்டப் பெயர்களைக் கொண்ட பானை ஓடுகள் அதிக
எண்ணிக்கையில் காணப்பட்டன.
சுமார்
2,300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு தொழிலகம் மற்றும்
வர்த்தக மையம் இருந்ததை இந்தக் கண்டுபிடிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
முதுமக்கள்
தாழியில் குழந்தையின் எலும்புகள் கண்டெடுப்பு:
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சித் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறிய முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
இது
ஆபரணங்களைக் குறிப்பாக சிறிய அளவிலான வளையல்களைக் கொண்டுள்ளது.
ஒரு
சிறிய மண்டை ஓடு மற்றும் கை
எலும்பு உள்ளே காணப்பட்டதால், அது ஐந்து முதல்
எட்டு வயது வரையிலான குழந்தையாக
இருக்கலாம் என கருதப்படுகின்றது.
வெண்கலம்
மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலவையால் ஆன நான்கு வளையல்கள்
இதில் காணப் பட்டன.
குறிப்பாக
முதுமக்கள் தாழிகளுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில்
உள்ள ஆதிச்சநல்லூர் என்பது ஒரு முக்கியமான தொல்லியல்
அகழாய்வுத் தளமாகும்.
TAGS : zero current affairs 2023,shankar ias academy current affairs in tamil 2023,tnpsc thervupettagam monthly current affairs,zero current affairs 2023 in tamil,thervupettagam monthly current affairs 2023,thervupettagam current affairs 2023 january,zero current affairs 2023 pdf,zero current affairs, monthly pdf,
No comments:
Post a Comment