வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

எஸ்.சி, எஸ்.டி பதவி உயர்வு மசோதா : மாநிலங்களவையில் இன்று தாக்கல்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பதவி உயர்வில் ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக, அனைத்து உறுப்பினர்களும் அவைக்கு வர வேண்டுமென, காங்கிரஸ் கட்சிக்கு, கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, இதற்கான மசோதாவை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவை  ஆய்வுக்கு எடுத்து, உடனே நிறைவேற்றப்படுமென்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.இன்று பகல் 12 மணி அல்லது பிற்பகல் 2 மணிக்கு இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்காக, மற்ற அலுவல்களை ஒத்திவைக்க நோட்டீஸ் அளிக்கப்படும் என்றும், இந்த மசோதா பாராளுமன்ற குழுவுக்கு பரிந்துரைக்கப்படாது என்றும் பன்சல் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா என்பதால், மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இருந்தால் தான் நிறைவேற்ற முடியும் என்பதாலும்,மசோதா ஓட்டெடுப்புக்கு வரும் போது, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாதியளவு பேர் அவையில் இருக்க வேண்டும் என்பதாலும், அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையி்ல் இருக்க வேண்டுமென  கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, சபை செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டுமென, அமைச்சர் பன்சல் பாரதிய ஜனதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பன்சல் தெரிவித்தார். refer : புதியதலைமுறை WEBSITE OR   

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...