தமிழக அரசின் கலைக் கல்லூரிகளில் புதிதாக 1,060 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த நியமனப் பணிகளை மேற்கொள்வதற்காக, கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 1,060 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணிக்கு, சம்பந்தப்பட்ட பாடத்தில், முதுகலைப் பட்டத்துடன், ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி பட்டம் பெற்றவர்களுக்கு, ஸ்லெட், நெட் தேர்ச்சி தேவையில்லை.
ஸ்லெட், நெட் தேர்வு, பிஎச்.டி பட்டம், பணி அனுபவம், நேர்முகத் தேர்வு என ஒவ்வொன்றுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில், உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியம், உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
tn arts college faculty jobs 2013, tn govt college faculty jobs 2013, 2013 jobs in tamilnadu,puthiyathalaimurai recruitment news 2013
No comments:
Post a Comment