விஜயா வங்கி, சென்டிரல் வங்கி உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகளில் 70 சிறப்பு அதிகாரி பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
சென்டிரல் வங்கி
சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பிரபல பொதுத்துறை வங்கியாகும். இதன் கிளைகளில் மொத்தம் 37 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டீலர், ரிசர்ச் அனலிஸ்ட், ஆர்கிடெக்ட், சிவில் என்ஜினீயர்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் போன்ற பிரிவில் இந்த அதிகாரி பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணி கோடு எண் 1, 2, 21 ஆகிய பணிகளுக்கு 40 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 31.3.13 தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
எம்.பி.ஏ. பைனான்ஸ், எம்.ஏ. எக்னாமிக்ஸ், பி.ஆர்க், பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். எஸ்.டி., எஸ்.சி பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.50–ம் இதர பிரிவனர் ரூ.550–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
26–4–13 முதல் 11–5–13 தேதிகளுக்கு உள்ளாக விண்ணப்பங்களை அனுப்பலாம். எழுத்து தேர்வு 23–6–13 அன்று நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் மேலும் விவரங்களை அறியவும் www.centralbankofindia.co.in என்ற முகவரியில் பார்க்கவும்.
விஜயா வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கி பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. 1200 கிளைகளுடன், 12 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி அடைந்து வரும் இந்த வங்கியில் செக்யூரிட்டி ஆபீஸர் பணிக்கு 17பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். 1–3–13 தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகாரி தரத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். காவல் துறையில் அசிஸ்டன்ட் சூப்பிரண்டன்ட், டெபுடி சூப்பிரண்டன்ட் போன்ற தரத்திற்கு குறையாத பொறுப்பில் 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி.,எஸ்.டி பிரிவினர் ரூ.50 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை 5–5–13 தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப நகல் 13–5–13 தேதிக்குள் கிடைக்கும்படியாக அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கவும் விவரங்களை அறியவும் www.vijayabank.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
சிண்டிகேட் வங்கி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியிலும் 16 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் செக்யூரிட்டி ஆபீசர் பணியில் நியமனம் பெறுவார்கள்.
25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.முப்படைகளில் அதிகாரி தர பணிகளில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களும், காவல் துறையில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி. அதிகாரி பணிக்கு குறையாத தரத்தில் 5 ஆண்டு பணியாற்றியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மற்றவர்கள் 50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 10–4–13 முதல் 10–5–13 தேதிக்குள்ளாக அனுப்பப்பட வேண்டும். பூர்த்தியான விண்ணப்ப நகல் குறிப்பிட்ட முகவரிக்கு 17–5–13 தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
மேலும் விவரங்களை அறிய www.syndicate bank.in என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment