இந்திய உருக்கு ஆணையத்தின் கிளை நிறுவனத்தில் 605 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுககு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய உருக்கு ஆணையம், ‘செய்ல்’ (SAIL) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கிளை நிறுவனங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது மேற்கு வங்காளத்தில் பர்ன்பூரில் செயல்படும் இதன் கிளை நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆளெடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 300 பேரும், அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 300 பேரும், பாய்லர் ஆபரேஷன் பணிக்கு 5 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13–5–13 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
பணியின் பெயர் – பணியிடங்கள் விவரம்
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (கிரேடு–3) – 300 பேர் (பொது–150, ஓ.பி.சி. – 66, எஸ்.சி. – 69, எஸ்.டி. – 15)
அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் (கிரேடு எஸ்–1) – 300 பேர் (பொது–150, ஓ.பி.சி. – 66, எஸ்.சி. – 69, எஸ்.டி. – 15)
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர் ஆபரேசன்) – 5 பேர்
கல்வித்தகுதி
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்திருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, கெமிக்கல், செராமிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன் இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஏர் கண்டிசனிங், ரெப்ரிஜிரேசன், டிராப்ட்ஸ்மேன், மெசினிஸ்ட், டர்னர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஐ.டி. – இ.எஸ்.எம். பிரிவுகளில் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாய்லர் ஆபரேசன் பணிக்கு 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் பிரிவில் பாய்லர் கம்பெட்டன்சி படிப்பில் முதல்வகுப்பு அல்லது 2–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 28 வயதுடையோரும், பாய்லர் ஆபரேஷன் பணிக்கு 30 வயதுடையோரும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெற்றால் மருத்துவ தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து தேர்வுகளில் வெற்றி பெற்று பணி பெறுபவர்கள் 2 ஆண்டு காலம் பயிற்சிக் காலமாக பணிபுரிய வேண்டும்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.50 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
கட்டணம் ஸ்டேட் வங்கி கிளையில் பர்ன்பூரில் மாற்றத்தக்க வகையில் (கணக்கு எண்:31932241266) இணையதள செலான் மூலம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கட்டணம் செலுத்தியபின் வழங்கப்படும் ‘ஜர்னல்’ எண்ணுடன் இணையதள விண்ணப்பம் நிரப்பி அனுப்பப்பட வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் 2 கணினி நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பமான நாள் : 17–4–13
விண்ணப்பிக்க கடைசி நாள் : 13–5–13
விண்ணப்பிக்கவும், மேலும் விவரங்களை அறியவும் www.sail.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment