என்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண் – பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: –
ராணுவத்தில் பல்வேறு நுழைவுத் திட்டங்களின் கீழ் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சியுடன் கூடிய பணி வழங்கப்படுகிறது. தற்போது ‘என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி’ நுழைவுத் திட்டத்தின் படி என்.சி.சி. வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணமாகாத ஆண்– பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி ஸ்கீம் (35–வது கோர்ஸ் கமென்சிங் ஏப்ரல்–2014)