விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். எல்ஐசி, லட்சுமி மில்ஸ், ஹூண்டாய், 108 ஆம்புலன்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்தனர்.