வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்
கருதிய பொருளையும் அதன் சுற்றத்தையும் கண்மூடித்தனமாய் அழிக்கும்
பொதுவாக தீய ஒழுக்கம் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளோரையும் அழிக்கும். கள்ளுண்ணல் அறிவை மயக்கி இன்னார் இனியார் என்று நோக்காது தான் அடையக் கருதிய பொருளைக் கண்மூடித்தனமாக வலிந்து அடையச் செய்யும். அக் கண்மூடித்தனத்தால் அடையும் பொருளோடு அதன் சுற்றத்தையும் அழிக்கும். – (கண்மூடித்தனமாக அடையச் செய்யும் என்பதாலேயே போருக்குச் செல்லுமுன் கள் குடித்தல் மரபாக்கப்பட்டது).
அகநானூறு- 182- இல், ’வில்லைக் கையிலேந்தி தீம் பலாவின் சுளையில் விளைந்த தேறலை மாந்திய குறவர் வேட்டை நாயோடு வேட்டைக்குச் செல்லும் போது முள்ளம் பன்றியைத்
துரத்திக் காட்டில் மல்லிகைப் புதரை மிதித்து, வெண்மையாகப் பூத்திருக்கும் அப் பூக்கள் இரத்தம் தோய்ந்து4 சிவப்பாகும் படிச் செய்து முள்ளம் பன்றியைக் கொன்று வருவர் . அத்தகைய குன்ற நாடனே! உன் தலைவி கங்குலில் நீ வரும் வழியை நினைந்து தினமும் துன்புறுகிறாள் ஆதலால் இரவுக்குறி மாற்றி பகற்குறி நல்குகிறோம்‘ என்று தோழி கூறுகிறாள்..
அதாவது, ’நீயும் கள் மயக்கம் போன்ற காதல் மயக்கத்தால் தலைவியை அடைய வேண்டும் என்ற வெறியால் தலைவியையும் அவள் சுற்றத்தையும் அழித்து விடாதே ‘ என்கிறாள்.
கள்ளுண்ணல் அறிவைத் திரித்து ஒருவன் தான் அடையக் கருதிய பொருளோடு அதன் சுற்றத்தையும் கண்மூடித்தனமாய் அழிக்கும் என்ற கருத்து அற இலக்கியங்கள் கூறாத ஒன்று.
No comments:
Post a Comment