வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label valuvar histroy. Show all posts
Showing posts with label valuvar histroy. Show all posts

valluvar did not say some things about the world

வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்

 கருதிய பொருளையும் அதன் சுற்றத்தையும்  கண்மூடித்தனமாய் அழிக்கும்  
                   பொதுவாக தீய ஒழுக்கம் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளோரையும் அழிக்கும்.   கள்ளுண்ணல் அறிவை மயக்கி இன்னார் இனியார் என்று நோக்காது தான் அடையக் கருதிய பொருளைக் கண்மூடித்தனமாக வலிந்து அடையச் செய்யும். அக் கண்மூடித்தனத்தால் அடையும் பொருளோடு அதன் சுற்றத்தையும் அழிக்கும்.  – (கண்மூடித்தனமாக அடையச் செய்யும் என்பதாலேயே போருக்குச் செல்லுமுன் கள் குடித்தல் மரபாக்கப்பட்டது).    

VALLUVAR DID NOT SAY THIS

வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்


 ஆக்கத்தைக் கெடுக்கும்
            பிறர் கொடுமை தாங்காமல் அதை மறத்தற்காகக்  கள்ளுண்ணல் என்பது சங்ககாலம் முதல்  நிகழ்ந்து வருகிறது. அதற்காகக் கள்ளுண்டால் அது கொடுமை செய்வாரிடம் அக் கொடுமையை உணர்த்தித்  திருத்தவோ , அதனால் நமக்கு வந்த துன்பத்தைப் போக்கவோ செய்யாமல்,  நம் ஆக்கத்தைக்  கெடுக்கும் என்ற கருத்தையும் அக இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
          சங்ககாலத்தில் கணவனின் பரத்தைமைக் கொடுமையை  மறத்தற்காக பெண்கள் கள்  குடித்தனர் . ஆனால்  ஒரு தலைவி அதற்காக கள் குடிக்காமல் , பரத்தைமை கொண்டாலும் தலைவன் உயிர் வாழ்வது தன் அருளால் தான். எல்லை மீறும் போதும் போது  பரத்தைமையைக் கைவிட்டுத் தலைவனைத் தன்னோடு கொண்டு வரமுடியும் என்று உறுதியாகக் கூறுகிறாள் (அகநானூறு- 336 ) .        
       ”தன் பறலோடு வதியும் பெண் நீர் நாயின் பசியைத் தீர்ப்பதற்காக ஆண் நீர் நாய் குளத்திலுள்ள வாளை மீனைக் கவ்வி குளத்தைக் குழப்புகிறது. குளம் குழம்பியதால் நீர் எடுக்க வந்த மகளிர் நீர் எடுக்காமல் (நீர் நாய் போல நம் கணவன் தமக்காக வாழவில்லையே என்று) தலைவன் கொடுமையை நினைத்துக் கள் குடித்துப் பரத்தமையைப் பாடி குரவை அயர்கின்றனர்.  
(ஆனால் நான் கள் குடித்துப் புலம்ப மாட்டேன்). தலைவனின் தேர் தர வந்த பரத்தை மகளிர் என் நலனை ஏசுகின்றனர். யானைப் பாகன் உயிரோடு வாழ்வது அவன் அடக்கி வைத்துள்ள யானை அருளுவதால் தான் . அதுபோல நான் அருளியதால் தான் தலைவனும்  அவனைச் சுற்றிள்ள பரத்தையரும் வாழுகின்றனர்.  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...