முப்படை அதிகாரி பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. பல்வேறு அரசுத்துறை அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி பூர்த்தி செய்து வருகிறது. தற்போது முப்படை அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான 2–வது தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேஷனல் டிபென்ஸ் அகாடமி அன்ட் நேவல் அகாடமி எக்ஸாம் (2)–2013 என்ற இந்த தேர்வின் மூலம் மொத்தம் 355 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நேஷனல் டிபென்ஸ் அகாடமிக்கு 300 பேரும், நேவல் அகாடமிக்கு 55 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வு 11–8–2013 அன்று நடைபெறுகிறது. பிளஸ்–2 படித்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 3–6–13 தேதிக்குள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வின் பெயர் : நேஷனல் டிபென்ஸ் அகாடமி அன்ட் நேவல் அகாடமி எக்ஸாம்(2)–2013
பணியிடங்கள் (உத்தேசமாக) : நேஷனல் டிபென்ஸ் அகாடமி – 300 பேர்
நேவல் அகாடமி – 55 பேர்
வயது வரம்பு
2–7–1995 மற்றும் 1–1–1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்வித் தகுதி
நேஷனல் டிபென்ஸ் அகாடமியின் தரைப்படை பிரிவுக்கு 10+2 முறையில் 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், கப்பல் படை மற்றும் விமானப்படை பிரிவுக்கு 12–ம் வகுப்பில் இயற்பியல் கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற உடல் எடையும் கொண்டிருக்க வேண்டும். பார்வைத்திறன், 6/6 முதல் 6/9 என்ற அளவில் இருக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் 2 நிலை தேர்வு முறைகளுக்கு உட்படுத்தி தேர்வு செய்யப்படுவார்கள்.
முதலில் எழுத்து தேர்வு (மனப்பாங்கு திறன் தேர்வு, நுண்ணறிவுத் தேர்வு) நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அப்போது நினைவுத்திறன் தேர்வு நடைபெறும். உடற்திறன் சோதிக்கப்படும். அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
கட்டணம்
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்து இதர பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டணத்தை ஸ்டேட் வங்கி கிளைகளில் இணையதள செலான் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் யு.பி.எஸ்.சி. இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 3–6–13
தேர்வு நடைபெறும் நாள் : 11–8–13
மேலும் விவரங்களை அறிய www.upsc.comஎன்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment