TET ANSWER KEYS 2013 |
வயிற்றுப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 5
* திருவெலும்பு (இடுப்புப் பகுதி) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 5
* வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 4
* விலா எலும்புகளும், மார்பெலும்புகளும், மற்றும் முதுகெலும்பும் இணைந்து மார்பு கூடாக உள்ளன.
* நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளைப் பாதுகாப்பது மார்புக்கூடும், மார்பெலும்புகளும்.
* மார்புக்கூட்டில் 12 இணை(24) விலா எலும்புகள் உள்ளன.
* முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்வெலும்புடன்
இணைந்திருக்கின்றன. இவை உண்மை விலா எலும்புகள் எனப்படும்.
* இறுதியில் உள்ள இரண்டு 11 மற்றும் 12-வது இணை விலா எலும்புகள் சிறியதாகவும் மார்பெலும்புடன் இணையாமல் இருக்கும்.
* இணையாக விலா எலும்புகள், மிதக்கும் விலா எலும்புகள் எனப்படும்..
* அச்சு சட்டக எலும்புகளின் எண்ணிக்கை - 80
* இணையுறுப்பு எலும்புகளின் எண்ணிக்கை - 126
* இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் உற்பத்தி செய்யப்படும் இடம் எலும்பு மஞ்சை.
* மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு துடுப்புகள்
* மண்புழு நிமிடத்திற்கு 25 செமீ வேகத்தில் செல்லும்
* பறவைகளின் இறக்கைகள் அவைகளின் முன்னங்கால்களின் மாற்றி அமைக்கப்பட்ட நவீன அமைப்பாகும்.
* எலும்பினை வெளிப்புறமாக சூழ்ந்துள்ள கடின தோல் போன்ற அமைப்பிற்கு பெரியாஸ்டியம் என்று பெயர்.
* நம் உடலில் காணப்படும் எலும்புகளை வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
* எலும்புகளின் நான்கு வகைகள்(வடிவத்தின் அடிப்படையில்)
1.நீளமான எலும்பு: எ.கா: தொடை எலும்புகள், கால் எலும்புகள், கால்விரல் எலும்புகள், கையெலும்பு, முன்கையெலும்பு,
கைவிரல் எலும்புகள்.
2.குட்டையான எலும்பு: எ.கா: மணிக்கட்டு, கணுக்கால் எலும்பு
3. தட்டையான எலும்பு எ.கா: மண்டேயோட்டு எலும்புகள், தோள்பட்டையில் உள்ள காரை எலும்பு, தோள்பட்டையில் உள்ள மார்பெலும்பு
4. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள் எ.கா: முதுகெலும்பு தொடரில் கடைசியாக உள்ள வால் எலும்பு மற்றும் மண்டையோடு, முக எலும்புகள்.
* எலும்புகளுக்கு இடையிலும் குருத்தெலும்புகளுக்கு இடையிலும் பற்களுக்கு எலும்புகளுக்கு இடையிலும் இணைப்பை ஏற்படுத்துவது மூட்டு
* சுற்றுச்சுழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக லைக்கன்கள் விளங்குகின்றன.
* பூஞ்சைகளுக்கு எ.கா: ஈஸ்ட் (ஒற்றைச் செல்லால் ஆனவை), ரைசோபஸ், அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ் (பல செல்களாலானவை)
* பூஞ்சைகளின் வகைப்பாடு: 1. சைகோமைகோட்டா (ரொட்டி காளான்) 2. ஆஸ்கோமைகோட்டா (கோப்பை பூஞ்சை) 3.
* பெசிடியோமைகோட்டா (கணுவடி பூஞ்சை) 4. யுடெரோமைகோட்டா (பெனிசிலியம்)
* உணவூட்ட அடிப்படையில் பூஞ்சைகளின் வகைகள் மூன்று 1. ஒட்டுண்ணிகள்(எ.கா: பக்சீனியா) 2. சாறுண்ணிகள் எ.கா:
* ரைசோபஸ், அகாரிகஸ் 3. கூட்டுயிரிகள்
* அதிக அளவு பரவலாக உண்ணப்படும் காளான்கள் பொத்தான் காளான்களாகும்.
* உண்ணத் தகுந்த காளான்கள் அகாரிகஸ் கம்பெஸ்ட்ரில், அகாரிகஸ் பைஸ்போரஸ்
* நச்சுத்தன்மை உள்ள காளான்கள் அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ்
* வைட்டமின் பி தயாரிப்பில் பயன்படும் பூஞ்சைகள் அஸ்ஃப்யா காஸிப் மற்றும் எரிமோதீசியா அஸ்ஃப்
* பூஞ்சை நோய்கள்: மனிதன்: மைகோசஸ், பாதப்படை, படர் தாமரை. விலங்குகள்: எர்காட், பாதப்படை தாவரங்கள்: கருப்பழுகல், கறும்புள்ளி, கன்கர்
* பிளான்டே (தாவர உலகம்)
1. பூவாத தாவரங்கள்: அ. பாசிகள் ஆ.பிரயோபைட்டுகள் இ. டெரிட்டோபைட்டுகள்
2. பூக்கும் தாவரங்கள்: அ. ஜிம்னோஸ்பெர்ம்கள் ஆ. அஞ்சியோஸ்பெர்ம்கள்
* கலிபோர்னியை இராட்சத் கெல்ப் என்பவை ஒரு பழுப்பு நிற கடல்பாசிகளாகும்
* கலிபோர்னியா இராட்சத கெல்ப் எனும் ஒரு பழுப்பு நிற கடல்பாசிகள் ஒரு நாளிற்கு சுமார் 15 செமீ வளர்ந்து ஒரு வருடத்தில் சுமார் 50மீ(160 அடி) நீளம் வரை அடையக்கடியது.
* உலகில் மிக வேகமாக வளரும் கடல் களை கலிபேர்னியா இராட்சத கெல்ப் எனும் ஒரு பழுப்பு நிற கடல்பாசிகள்
* கரியமில வாயு மற்றும் உடலின் மற்ற கழிவுகளை நீக்கவும் மனிதன் சிறுநீரை சிதைக்கவும் விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் பாசி - குளோரெல்லா பைரெனோய் டோஸா
* ஸ்பாக்னம் மாஸ் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கால்சட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
* சாற்றுக் குழாய் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனைப் பெற்று பூவாத தாவரங்கள் பெரணிகள் ஆகும்.
* பூக்கும் தாவரங்களின் ஒரு மிகப்பெரிய தொகுதி - ஆஞ்சியோஸ்பெர்ம்
* ஆஞ்சியோஸ்பெர்ம் ஏறக்குறைய 26,000 உயிர் வாழ் தாவரங்களைக் கொண்டது.
* தன்னுடைய விதையினுள் ஒரே ஒரு வித்திலையைக் கொண்ட தாவரங்கள் ஒரு வித்திலைத் தாவரங்கள் என அழைப்படுகின்றன. எ.கா: புல், நெல், சோளம்
* தன்னுடைய விதையினுள் இரண்டு வித்திலையைக் கொண்ட தாவரங்கள் இரு வித்திலைத் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா: அவரை, பட்டாணி, மா
* வேரின் புறத்தோல் ரேசோடெர்மிஸ் எனப்படும்.
* வேரின் மையப்பகுதி பித் எனப்படும்( ஒரு வித்திலை தாவரத்தில் மட்டும் உள்ளது)
* பசுமை மாறாத அழகு தாவரம் அரக்கேரியா (குரங்கின் புதிர்)
* பனை போன்ற சிறிய ஜிம்னோஸ்பெர்ம் சைகஸ்
* கூல்கள் பூப்போன்ற தண்டின்மீது திறந்த நிலையில் உள்ள ஜிம்னோஸ்பெர்ம் - நீட்டம்
* வைரஸ் என்ற வார்த்தை இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
* வைரஸ் என்பதன் பொருள் நஞ்சு
* வைரஸை முதன் முதலில் ரஷ்யாவைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் ஐவனோஸ்கி 1892 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
* வைரஸ்கள் எந்த உயிரியைத் தாக்கி அதனுள் தன்னைப் பெருக்கிக் கொள்கிறதோ அது விருந்தொம்பி செல் என்று அழைக்கப்படுகிறது.
* பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா லாக்டோ பாசில்லஸ்
tet answer keys 2013, tntet answer keys 2014, TNTET-2013 Supplementary Answer Key,tet science question and answer free download, tet answer key for science , tet tamilnadu answer key download ,
No comments:
Post a Comment