வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள் TET ANSWER KEYS PART 2


* நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் எ.கா: அசட்டோபாக்டர், கிளாஸ்டிரியம், ரைசோபியம், நீலப்பச்சை பாசிகளான ஆசிலட்டோரியா, அனபீனா, நாஸ்டாக்
* விருந்தோம்பியின் அடிப்படையில் வைரஸ்களின் ஐந்து வகைகள்: 1. பாக்டீரியோபேஜ் 2. பைட்டோபேஜ் (தாவர வைரஸ்கள்) 3. பைகோ பேஜ் (பாசி வைரஸ்கள்) 4. சூபேஜ் (விலங்கு வைரஸ்கள்) 5. மைக்கோ பேஜ் (பூஞ்சை வைரஸ்கள்)
* ஒரு செல்லால் ஆன நுண்ணுயிரி - பாக்டீரியா
* பாக்டீரியாவைக் குறித்த அறிவியல் - பாக்டீரியாலஜி
* பாக்டீரியாவின் செல் - புரோகேரியோட்டிக் செல்
* பாக்டீரியாவை மைக்ரான் என்ற அலகால் அளக்கலாம்
* 1 மைக்ரான் - 1/1000மிமீ

* பாக்டீரியாவின் வடிவத்தை வைத்து அதன் நான்கு வகைகள்: 1. காகாகஸ் (உருளை வடிவம்) 2. பேசில்லஸ் (குச்சி வடிவம்) 3.ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்) 4. விப்ரியோ (கால்புள்ளி வடிவம்)
* கசையிழைகளின் எண்ணிக்கை அமைவு முறையின் அடிப்படையில் பாக்டீரியங்களின் வகைகள்: 1. ஒற்றைக் கசையிழை வகை 2. இருமுனைக் கசையிழை வகை 3. ஆஸ்ட்ரிகஸ் (கசையிழைகளற்றவை) 4. ஒரு கற்றை கசையிழை வகை 5. பெரிட்ரைகஸ் கசையிழை வகை
* கிளாமிடோமோனாஸ் என்பன எளிய ஒரு செல்லால் ஆன பச்சை நிற பாசிகள் ஆகும்.
* பாசிகளைக் குறித்த அறிவியல் - பைக்காலஜி
* ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை - ஈஸ்ட்
* பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
* அமொனியாவை நிலைநிறுத்தும் பாக்டீரியா - பாசில்லஸ் ரமோஸஸ்
* தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா - லாக்டிக் அமில பாக்டீரியா

* பாக்டீரியாக்களால் ஏற்படும் தீங்குகள்: தீங்குயிரியின் பெயர்  - நோய் கீழ்கண்டவாறு:
சாந்தோமோனாஸ்சிட்ரி  - சிட்ரஸ் கேன்சுர்
சோடோமோனாஸ் - வில்ட் நோய் - உருளைக்கிழங்கு
சொலரனாசீயாரம்  - பாக்டீரியல் பிளைட் - நெல்
சாந்தோமோனாஸ்ஒரைசே - பாக்டீரில் பிளைட் - நெல்

* பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
செர்கோஸ்போரா பெர்சனேட்டா - டிக்கா நோய் - வேர்க்கடலை
செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா - டிக்கா நோய் - வேர்க்கடலை
பைரிகுலோரியா ஒரைசா  - வெப்ப நோய் - நெல்

* வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
உச்சிக் கொத்து வரைஸ் - வாழையில் உச்சிக்கொத்து நோய்
புகையிலை பல வண்ண வைரஸ் - புகையிலையில் பல வண்ண நோய்
வெள்ளரி பல வண்ண வைரஸ் - வெள்ளரியில் பல வண்ண நோய்

* தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
வைரஸ் - சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா - இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
பாக்டீரியா - காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் - அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
பூஞ்சைகள் - பாதத்துடிப்பு நோய் - ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
* ஒரு செல் உயிரிகள் - மலேரியா - நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
* பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
* பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
* தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்
செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)

* செல்களும் அதன் வடிவங்களும்:
நரம்பு செல் - நட்சத்திரம்
சுடர் செல் - குழல்
சுரப்பி செல் - கனசதுரம்
தட்டு எபிதீலியம் - பல்கோணம்
தூண் எபிதீலியம் - உருளை
அண்ட செல் - முட்டை
இரத்தச் செல்கள் - வட்டம்
தசை செல்கள், நார் செல் - நீள் வடிவம்

tet answer key for science, tet answer keys 2013, tet science question and answer free download, tet tamilnadu answer key download, tntet answer keys 2014, TNTET-2013 Supplementary Answer Key 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...