AIIMS RECRUITMENT 2014 |
எம்ய்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 1004 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்’ என்னும் இந்திய மருத்துவ அறிவியல் மையம் ‘எய்ம்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டு இந்த மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் மையத்தில் ‘சிஸ்டர் கிரேடு–2’ பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 1004 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற பொது நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : சிஸ்டர் கிரேடு 2
பணியிடங்கள் : 1004 (பொது–532, ஓ.பி.சி.– 257, எஸ்.சி.–145, எஸ்.டி.–70)
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 5–8–13 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
பள்ளிக்கல்வியை நிறைவு செய்து, பொது நர்சிங்/ மிட்வைப் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் ‘ஏ’ கிரேடு நர்ஸ் மற்றும் மிட்வைப் சான்றிதழ் அல்லது அதற்கு இணையான கல்வி பெற்ற ஆண் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 சட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். நகல் விண்ணப்பம் மற்றும் அசல் கட்டண செலான் தேர்வுக்கு அழைக்கப்படும்போது கொண்டு செல்ல
வேண்டும்.
வேண்டும்.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 5–8–13
விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை பார்க்கவும் சொடுக்க வேண்டிய இணையதள முகவரி :www.aiimsexams.org
No comments:
Post a Comment