tnpsc recruitment 2014-15 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிர்வாக அதிகாரி (கிரேடு3) பணிக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. இது ‘குரூப்–7 பி’ தேர்வின் கீழ் நிரப்பப்படும் பணியிடங்களாகும். மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியானவர்களும், 35 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம், எஸ்.சி,எசி.(ஏ), எஸ்.டி., எம்.பி.சி./டி.சி மற்றும் பி.சி. பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. வயது வரம்பு 1–7–13 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள், கலை, அறிவியல் படிப்பு அல்லது வணிகவியல் பிரிவில் குறைந்தபட்சம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் ரூ.50 விண்ணப்பக் கட்டணம் மற்றும் ரூ.100 தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் கட்டணம் செலுத்தலாம். ‘ஒன் டைம்’ பதிவு முறையில் விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப கட்டணம் தவிர்த்து மீதி தொகை ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பிய பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் 16–8–13 தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்டணம் செலுத்த கடைசி நாள் 20–8–13. இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு 19–10–13 அன்று நடைபெறும்.
குரூப் 8–ல் 23 பணிகள்
டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, குரூப்–8 தேர்வின் மூலம் நிர்வாக அதிகாரி (கிரேடு4) பணிக்கு 23 பேரை தேர்வு செய்ய உள்ளது.
இந்த பணிகளுக்கு 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ‘தமிழ்புலவர்’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ‘ஒன் டைம்’ முறையில் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் 16–8–13 தேதிக்குள்ளாக ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 26–10–13 அன்று இதற்கான எழுத்து தேர்வு நடைபெறும்.
மேலும் விரிவான விவரங்களை www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment