தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள SSR பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. படிக்கும் போதே நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக முகாமில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. SSR பாலிடெக்னிக் மற்றும் SJTCS Staff Solutions நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 400 பேருக்கு, இந்த முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளது உற்சாகம் தரும் அனுபவம் என்கின்றனர் மாணவர்கள்
.jpg)