வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

GATE தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன 2013


கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற GATE எனப்படும் Graduate Aptitude Test in Engineering தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன.
இதில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் இருந்து 22,476 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, 22,400 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால் உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தையும், பிகார் நான்காவது இடத்தையும், கேரளா ஐந்தாவது இடத்தையும் GATE தேர்வு முடிவுகளில் பிடித்துள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது 2013


விருதுநகர் மாவட்டத்தில் பணி நாடுநர்களுக்கு பயனளிக்கும் விதமாக, இரண்டு நாட்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகாசி அருகே தாயில்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முகாம் நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி புதிய தலைவர் நவநீத கிருஷ்ணன்: 12ம் தேதியுடன் நட்ராஜ் ஓய்வு

 Navaneethakrishnan Is Tnpsc S New Chairman சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ் 23-1-2012 அன்று நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள் 62 வயதை அடைந்தாலோ அல்லது 6 ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டாலோ

குரூப் 1 தேர்வு : 25 பணியிடங்களுக்கு 1.30 லட்சம் பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப் 1-க்கான முதற்கட்டத் தேர்வு, இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 33 மையங்களில் இன்று நடந்த குரூப் 1 முதல் நிலை தேர்வை 1.30 லட்சம் பேர் எழுதினர். 25 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (காலி பணியிடம் 8), போலீஸ் டிஎஸ்பி (4), வணிகவரித்துறை துணை ஆணையாளர் (7), மாவட்ட பதிவாளர் (1) மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி (5) ஆகிய 25 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 16ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 


TNPSC group I hall ticket download 2013


குரூப் 1 முதனிலைத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகிய இணைய தளங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...