வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

ESIC சார்பில் துணை மருத்துவ பணியிடங்களுக்கு தற்காலிகமான ஆட்கள் தேர்வு 2013


சென்னை அசோக் நகரில் உள்ள தொழிலாளர் மருத்துவ காப்பீட்டு நிறுவனமான ESIC சார்பில் துணை மருத்துவ பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Nursing Orderly மற்றும் Lab Assistant ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் பட்டியல் www.esicchennai.org என்ற இணைய தளத்தில் உள்ளது. தற்காலிகப் பட்டியலில் உள்ளவர்களுக்கு நேர்காணல் மூலம் தேர்ச்சி முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி, நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் பல்வேறு காலிப் பணிகள் 2013


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் கொச்சி சுத்திகரிப்பு மையத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரளாவில் உள்ள BPCL நிறுவனத்தில் கெமிக்கல் பிரிவில் 20 காலிப் பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 19 காலிப் பணியிடங்களும், எலக்டிரிக்கல் பிரிவில் 3 பணியிடங்களும் Instrumentation பிரிவில் 3 காலிப் பணியிடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 45 காலிப் பணியிடங்களில் 23 பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 12 பணியிடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், 8 பணியிடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தலா ஒரு பணியிடம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். மருத்துவ ரீதியான பூரண தகுதி உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
அடிப்படைக் கல்வித் தகுதிகள்:

எல்லைக் காவல் படையில் 717 பணியிடங்கள் April Updates 2013

எல்லைக் காவல் படையில் 717 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்தோ–திபெதன் பார்டர் போலீஸ் போர்ஸ் சுருக்கமாக ஐ.டி.பீ.பி. என அழைக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த காவல்படை பிரிவில் தற்போது பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் (இந்தி டிரான்ஸ்லேட்டர்), ஹெட் கான்ஸ்டபிள் (டிரெஸ்ஸர் வெட்னரி), கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்), சப்–இன்ஸ்பெக்டர் (ஓவர்சீயர்), கான்ஸ்டபிள் (பயோனீர்), ஹெட்கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்), கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்), கான்ஸ்டபிள் (டிரைவர்) போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 717 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – பணியிடங்கள்

ராணுவ தொழிற்சாலையில் 541 வேலைவாய்ப்புகள் April Updates 2013

ராணுவ தளவாட தொழிற்சாலையில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 541 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாட சாமான்களை, ராணுவ தளவாட தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் ஆவடி உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
தற்போது மகாராஷ்டிர மாநிலம் பாந்திராவில் செயல்படும் தளவாட தொழிற்சாலையில் குரூப்–சி பணியாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 541 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – குரூப்–சி ஒர்க்கர்
பணியிடங்கள் – 541
வயது வரம்பு

விளையாட்டு வீரர்களுக்கு ரிசர்வ் வங்கியில் பணி 2013 April Updates

விளையாட்டு வீரர்களுக்கு ரிசர்வ் வங்கியில் சிறப்பு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளின் தலைமை வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியில் அசிஸ்டன்ட் மற்றும் ஆபீஸ் அட்டன்டன்ட் பணிக்கு விளையாட்டு வீரர்களில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் 18 பேரும், கால்பந்து வீரர்கள்9 பேரும், பேட்மிண்டன் வீரர்கள் 8 பேரும், கேரம் வீரர் ஒருவரும், டேபிள்டென்னிஸ் வீரர்கள் 8 பேரும், டேபிள் டென்னிஸ் (பெண்கள்) 4 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...