வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

வேளாண் வாரியத்தில் 195 வேலைகள் | Agriculture Scientist Research Board Recruitment 2013


வேளாண் வாரியத்தில் விஞ்ஞானி, முதல்வர் பணி உள்ளிட்ட 195 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியம் ஏ.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வாரியத்தில் விஞ்ஞானி, முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 195 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் – பணியிடங்கள்
சீனியர் சயின்டிஸ்ட் – 123 பேர்

பிரின்சிபல் சயின்டிஸ்ட் – 30 பேர்
எச்.ஓ.டி. – 20 பேர்
புராஜக்ட் கோ–ஆர்டினேட்டர் – 2 பேர்
ரிசர்ச் மேனேஜ்மெனட் பொசிஸன் – 17 பேர்
வயது வரம்பு
ரிசர்ச் மேனேஜ்மெனட் பொசிஸன் பணிக்கு 60 வயதுக்கு உட்பட்டவர்களும், சயின்ட்டிஸ்ட் பணிகளுக்கு 52 வயதுக்கு உட்பட்டவர்களும், 47 வயதுக்கு உட்பட்டவர்கள் சீனியர் சயின்டிஸ்ட் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 10–6–13 தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
கல்வித் தகுதி
முதுகலை படிப்புடன் முனைவர் பட்டம், பொறியியலில் முனைவர் பட்டம், முதுகலை படிப்பு, முதுகலை டிப்ளமோ படிப்பு என பலதரப்பட்ட கல்வித்தகுதி பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்பு உள்ளது.
பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு குறிப்பிட்ட கால அனுபவமும் தகுதியாக கோரப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கான கல்வித்தகுதி, அனுபவ விவரங்களை முழுமையாக படித்தறிந்து கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கவும்.
கட்டணம்
அனைத்து பணி விண்ணப்பதாரர்களும் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், ஊனமுற்றோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வெளிநாட்டில் இருப்பவர்கள் 50 டாலருக்கான சர்வதேச வங்கி வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியிலான விண்ணப்பத்தில் மார்பளவு புகைப்படம் ஒட்டி நிரப்பி, டி.டி. இணைத்து அனுப்பவும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் எண், விளம்பர எண் உள்ளிட்டவற்றை குறித்து அனுப்ப வேண்டும். சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஒன்றும், விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்டு இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:–
The Secretary,
Agricultural Scientists Recruitment Board,
Krishi Anusandhan Bhawan I,
Pusa, New Delhi 110012
 முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10–6–13
மேலும் விரிவான விவரங்களை அறிய www.asrb.org.in  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...