இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2600 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடட் நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடட், யுனைட்டடு இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடட் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடட் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடட் நிறுவனத்தில் 800
பணியிடங்களும், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 600 பணியிடங்களும், தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 600 பணியிடங்களும், யுனைட்டடு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 600 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. மொத்தம் 2600 உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். இதில் தமிழகத்திற்கு 262 பணியிடங்கள் உள்ளன.
பணியின் பெயர் : அசிஸ்டன்ட்
பணியிடங்கள் : 2600
(பொது –1370, ஓ.பி.சி. – 725, எஸ்.சி.–318, எஸ்.டி.–187)
நிறுவன வாரியான பணியிடங்கள் விவரம்:
நேஷனல் இன்சூரன்ஸ் – 800 பேர் (பொது–379, ஓ.பி.சி.–227, எஸ்.சி.–125, எஸ்.டி. – 69)
ஓரியண்டல் இன்சூரன்ஸ் – 600 பேர் (பொது–368, ஓ.பி.சி.–119, எஸ்.சி.–67, எஸ்.டி.–46)
தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் – 600 (பொது–319, ஓ.பி.சி.–224, எஸ்.சி.– 30, எஸ்.டி.–27)
யுனைட்டடு இந்தியா இன்சூரன்ஸ் – 600 (பொது–304, ஓ.பி.சி.–155, எஸ்.சி.–96, எஸ்.டி.–45)
வயது வரம்பு
30–6–13 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 28 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அதாவது 1–7–1985 மற்றும் 30–6–1995 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் 31–5–13 தேதியில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். அவர்கள் 12–ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்றோர் 12–ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், கணினித் திறன் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.70 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஓ.பி.சி. மற்றும் பொதுப்பிரிவினர் ரூ.220–ம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் தவிர்த்த பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.120 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்துவோர், இணையதள செலான் மூலம் ழிகிஜிமிளிழிகிலி மிழிஷிஹிஸிகிழிசிணி சிளிவிறிகிழிசீ லிஜிஞி (கணக்கு எண் 32968716721) என்ற பெயருக்கு அருகிலுள்ள ஸ்டேட் வங்கி கிளையில் கட்டண தொகையை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் இணைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் கட்டண செலான் பிரதி எடுத்து, கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு ஆரம்பமான நாள் : 18–5–13
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி
நாள் : 8–6–13
கட்டணம் செலுத்த அவகாசம் :
18–5–13 முதல் 12–6–13
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 14–7–13
மற்றும்/அல்லது 21–7–13
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி:www.nationalinsuranceindia.com
No comments:
Post a Comment