உருக்காலை நிறுவனத்தில் 276 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
செய்ல் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய உருக்காலை ஆணையம், இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் செய்ல் நிறுவன கிளையில் 226 டெக்னீசியன் பணியிடங்களும், ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ கிளையில் 50 டெக்னீசியன் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.
டிப்ளமோ என்ஜினீயரிங், ஐ.டி.ஐ. படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
ரூர்கேலாவில் 226 பணிகள்
ரூர்கேலா கிளையில் உள்ள பணியிடங்கள் மற்றும் தகுதி விவரங்கள் வருமாறு:–
பணியின் பெயர் – பணியிடங்கள்
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (டிரெயினி) – 126 பேர்
அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் (டிரெயினி) – 106 பேர்
வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1–3–13 தேதியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு மெட்ரிக்குலேசன் தேர்ச்சியும், 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பும் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் மெட்டலர்ஜி, கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒருபிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.250–ம், அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.150–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி பிரிவு ஆபரேட்டர் கம் டெக்னீசியன் விண்ணப்பதாரர்கள் ரூ.50–ம், அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் விண்ணப்பதாரர்கள் ரூ.20–ம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் செய்ல் நிறுவன இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இணையதள செலான் மூலம் கட்டணம் செலுத்திய பின் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அனுப்பிய பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 8–6–2013
பொக்காரோவில் 50 பணிகள்
ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் 50 அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு 1.3.13 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.150–ம், மற்றவர்கள் ரூ.50–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்தியவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பலாம். 5–6–13 தேதிக்குள்ளாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
மேலும் விரிவான விவரங்களை அறிய www.sail.co.in என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.
No comments:
Post a Comment