இந்திய துணை ராணுவத்தில் 556 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்தோ–திபேதன் பார்டர் போலீஸ் போர்ஸ், இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். இந்த காவல் படையில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடத்துக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 556 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10–ம்வகுப்பு படித்தவர்களுக்கும், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதில் பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : கான்ஸ்டபிள்
பணியிடங்கள் : 556
பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம்: கான்ஸ்டபிள் (டெயிலர்) – 43 பேர், கார்டனர் (22 பேர்), காப்லர் – 33 பேர், வாட்டர் கேரியர்– 115 பேர், சபாய் கர்மாச்சாரி – 116 பேர், குக் – 117 பேர், வாஷர்மேன் – 56 பேர், பார்பர் – 54 பேர்
வயது வரம்பு
டெயிலர், கார்டனர், காப்லர் பிரிவு கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 18 முதல் 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாட்டர் கேரியர், சபாய் கர்மாச்சாரி, குக், வாஷர்மேன், பார்பர் பிரிவு கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 18 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 31–5–13 தேதியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும். வயது வரம்பு தளர்வு கோருவோர் அதற்கான சாதிச் சான்றிதழை சமர்ப்பித்து உரிமை பெறலாம்.
கல்வித்தகுதி
கான்ஸ்டபிள் பிரிவில் டெயிலர், கார்டனர், காப்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், பணி சார்ந்த பிரிவில் 2 ஆண்டு பணியனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஓராண்டு ஐ.டி.ஐ. பயிற்சி பெற்று, ஒரு ஆண்டு பணியனுபவம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அல்லது இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கான்ஸ்டபிள் பிரிவில் வாட்டர் கேரியர், சபாய் கர்மாச்சாரி, குக், வாஷர்மேன், பார்பர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி
கான்ஸ்டபிள் பிரிவில் டெயிலர், கார்டனர், காப்லர் பணி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 176.5 செ.மீ. உயரமும், மார்பளவு 78+5 என்ற அளவிலும் இருக்க வேண்டும். எஸ்.டி. பிரிவினர் 162.5 செ.மீ. உயரமும், 76+5 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும்.
கான்ஸ்டபிள் பிரிவில் வாட்டர் கேரியர், சபாய் கர்மாச்சாரி, குக், வாஷர்மேன், பார்பர் பணி விண்ணப்பதாரர்கள் 170 செ.மீ. உயரமும், 80+5 செ.மீ. மார்பளவு பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி. பிரிவினர் 162.5 செ.மீ. உயரமும், 76+5 மார்பளவும் பெற்றிருப்பது அவசியம்.
பார்வைத்திறன் 6/6 முதல் 6/9 என்ற அளவில் இருக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்களின் உடற்தகுதி மற்றும் உடற்திறன் முதலில் சோதிக்கப்படும். பின்னர் பணி சார்ந்த டிரேடு டெஸ்டும், எழுத்து தேர்வும் நடத்தப்படும். இறுதியாக மருத்துவ தேர்வு நடைபெறும்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டணத்தை மத்திய ஆளெடுப்பு அஞ்சல் முத்திரையாக ஒட்டி குறுக்கீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியிலான விண்ணப்பம் மற்றும் அனுமதி அட்டை தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் 31–5–13 தேதிக்குள்ளாக சென்றடைய வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box No 650,
Industrial Area Chandigarh (UT)
Pin code -160002
Industrial Area Chandigarh (UT)
Pin code -160002
முக்கிய தேதி
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31–5–13
மேலும் விரிவான விவரங்களை www.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment