வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

துணை ராணுவ படையில் 766 வேலைவாய்ப்புகள் | Sashastra Seema Bal Recruitment 2013 June Notifications

இந்திய துணை ராணுவத்தில் 766 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12–ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்று சஸாஸ்திரா சீமா பால். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கீழ் இயங்கும் இந்த படைப் பிரிவிற்கு ‘டெலிகாம் கேடர் 2013–14’ பிரிவில் துணை சப்–இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 766 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
பணியின் பெயர் : டெலிகாம் கேடர் 2013–14
பணியிடங்களின் எண்ணிக்கை : 766

பிரிவு வாரியாக பணியிடங்கள் விவரம் : அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் 43 பேர், ஹெட்கான்ஸ்டபிள் – 632 பேர், கான்ஸ்டபிள் – 91 பேர்
வயது வரம்பு
20–6–13 தேதியில் 18 முதல் 25 வயதுடையவர்கள் அசிஸ்டன்ட் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கும், ஹெட்கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
அசிஸ்டன்ட் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது 12–ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஹெட்கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம் அடங்கிய பிரிவில் 12–ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கான்ஸ்டபிள் பணி விண்ணப்பதாரர்கள் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி
விண்ணப்பதாரர்கள் 170 செ.மீ. உயரமும், மார்பளவு 80+5 என்ற அளவிலும் இருக்க வேண்டும். எஸ்.டி. பிரிவினர் 162.5 செ.மீ உயரமும், 76+5 செ.மீ. என்ற அளவில் மார்பளவும் பெற்றிருந்தால் போதுமானது. உயரத்திற்கேற்ற எடை சரிபார்க்கப்படும். பார்வைத்திறன் 6/6, 6/9 என்ற அளவில் இருக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
அனைத்துவிண்ணப்பதாரர்களின் சான்றிதழ் விவரங்கள் முதலில் சரிபார்க்கப்படும், பின்னர் உடற்தகுதி மற்றும் உடற்திறன் சோதிக்கப்படும். அடுத்து எழுத்து தேர்வு நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணம் செலுத்துவோர் டி.டி.யாக இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அத்துடன் அனுமதி அட்டைக்கான விண்ணப்பமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு 20–6–13 தேதிக்கு முன்பாக அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை (ரூ.25 அஞ்சல் முத்திரையுடன்) இணைக்கப்பட வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:–
THE INSPECTOR GENERAL,
FRONTIER HQ, SSB LUCKNOW,
SANKALP BHAWAN, VIBHUTI KHAND,
PLOT NO. TC/35V2, GOMATI NAGAR,
LUCKNOW (UP) PIN 226010
 முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20–6–13
மேலும் விரிவான விவரங்களை அறிய www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...