
விண்ணப்பதாரர்கள் 1–7–13 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்குத் தகுதியான இதர கல்வி விவரம், அனுபவம், வயது உச்சவரம்பு போன்ற விவரங்களை இணையத்தில் காணலாம்.
எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், எழுத்து தேர்வு மூலம் ஸ்டோர் கீப்பர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் பதிவு செய்திருப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ஆன்லைன், ஆப்–லைன் இரு முறைகளிலும் செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனுப்பிய பின் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பம் 10–6–13 தேதிக்குள்ளாகவும், கட்டணம் 12–6–13 தேதிக்குள்ளாகவும் அனுப்பப்பட வேண்டும்.
மேலும் விரிவான விவரங்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment