முப்படை அதிகாரி பணியிடங்களுக்கு 509 பேர் யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் உயரதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்குத் தனித் தேர்வு நடத்துவது போலவே, இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு தகுதியான வர்களை தேர்வு செய்யவும் ஒருங்கிணைந்த தேர்வு நடத்தப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்குத் தனித் தேர்வு நடத்துவது போலவே, இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு தகுதியான வர்களை தேர்வு செய்யவும் ஒருங்கிணைந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தற்போது ‘காம்பைன்டு டிபென்ஸ் சர்வீசஸ் எக்ஸாமினேசன்(2)–2013’ எனும் தேர்வை நடத்தி முப்படைகளுக்குத் தகுதியான 509 பேரை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. 24–6–13 தேதிக்குள்ளாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வின் பெயர் : காம்பைன்டு டிபென்ஸ் சர்வீஸ் எக்ஸாமினேசன்(2) – 2013
பணியிடங்கள் : 509 பேர்
படைப்பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் : இந்தியன் மிலிடரி அகாடமி – 250 பேர், இந்தியன் நேவல் அகாடமி – 40 பேர், விமானப்படை அகாடமி – 32 பேர், ஆபீர்ஸ் டிரெயினிங் அகாடமி(ஆண்கள்) – 175 பேர், ஆபீஸர்ஸ் டிரெயினிங் அகாடமி (பெண்கள்) – 12 பேர். (இவர்கள் அந்தந்த படைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப்பின், தகுதி யானவர்கள் பணிநியமனம் பெறுவார்கள்.)
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். இந்தியன் மிலிட்டரி அகாடமி, நேவல் அகாடமி பணியாளர்கள் 2–7–1990 மற்றும் 1–7–1995 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். விமானப்படை அகாடமி விண்ணப்பதாரர்கள் 2–7–1991 மற்றும் 1–7–1995 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆபீஸர்ஸ் டிரெயினிங் அகாடமி விண்ணப்பதாரர்கள் 2–7–1989 மற்றும் 1–7–1995 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்விரு தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி கடைபிடிக்கப்படும்.
கல்வித் தகுதி
இந்தியன் மிலிட்டரி அகாடமி மற்றும் ஆபீஸர்ஸ் டிரெயினிங் அகாடமி பணி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தியன் நேவல் அகாடமி விண்ணப்பதாரர்கள் என்ஜினீயரிங் பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமிக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல் மற்றும் கணிதம் அடங்கியபிரிவில் 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுகுறைந்தபட்சம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்
பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்து மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டணத்தை ஸ்டேட் வங்கி கிளையில் பணமாகவோ, நெட்பேங்க் முறையிலோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் யு.பி.எஸ்.சி. இணையதளத்திற்குச் சென்று, விதிமுறைகள், தகுதிகளை நன்கு படித்தறிந்த பின்னர் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முன்னதாக கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர் கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை அனுப்பத் தேவையில்லை.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24–6–13
மேலும் விரிவான விவரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment