வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பிளஸ்–2 படித்தவர்களுக்கு கப்பல்படையில் பயிற்சியுடன் பணி | nausenabharti.nic.in recruitment June Updates

கப்பல் படையில் பிளஸ்–2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி காத்திருக்கிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய கப்பல் படையில், பல்வேறு பணிகளுக்கும் தகுதியானவர்களை குறிப்பிட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து பயிற்சி அளித்து பணி நியமனம் செய்கிறார்கள். தற்போது சாய்லர் எனப்படும் மாலுமி பணிக்கு 12–ம் வகுப்பு படித்தவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் 16–6–13 தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கான தகுதி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : கோர்ஸ் கமென்சிங் பிப்ரவரி 2014
பணியின் பெயர் : சாய்லர் (எஸ்.எஸ்.ஆர். – 01/2014 பேட்ஜ்)
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1–2–1993 மற்றும் 31–1–1997 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
கல்வித் தகுதி
12–ம் வகுப்பு (10+2) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் இயற்பியல் இவற்றில் ஒரு பாடமாவது உள்ளடக்கிய பிரிவில் 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதியியல், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் அடங்கிய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னிலை பெறுபவர்கள் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
22 வார பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறுவார்கள். இது 15 ஆண்டுகள் பணிபுரியக்கூடிய வேலை வாய்ப்பாகும். மாஸ்டர் ஷீப் பெட்டி ஆபீஸர்–1 பதவி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறும் வாய்ப்புள்ள பணியாகும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தபால் மற்றும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தபால் வழியில் விண்ணப்பிப்பவர்கள் இணையதள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பம் தயாரித்தோ அனுப்பலாம்.
விண்ணப்ப முகப்பில் பணியின் குறியீடு– மாநிலம், பிளஸ்–2 மதிப்பெண் சதவீதம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். உதாரணமாக SSR012014TAMILNADU68/7%(10+2)      என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 6–6–13 தேதிக்குள் விண்ணப்பித்துவிட்டு, அதனை கணினிப் பிரதி எடுத்து 16–6–13 தேதிக்குள் கிடைக்கும்படி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழக விண்ணப்பதாரர்கள் தபால் விண்ணப்பம் மற்றும் நகல் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:–
Post Box No 488
Gole Dak Khana, GPO
New Delhi 110001
முக்கிய தேதி
விண்ணப்ப பதிவு ஆரம்பமான நாள் : 25–5–13
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 6–6–13
தபால் விண்ணப்பம் மற்றும் நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : 16–6–13
மேலும் விவரங்களை www.nausenabharti.nic.in    என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...