இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகமாக நிறுவப்பட்டதுதான் பி.எஸ்.எப்., எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் ஆகும். இந்த படை இந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய படைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு 1965 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் படைக்கு என்றே பிரத்யேகமான மருத்துவமனைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பாரா மெடிக்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : எல்லைப் பாதுகாப்புப் படையின் பாரா மெடிக்கல் பதவிக்கு எஸ்.ஐ., (ஸ்டாப் நர்ஸ்) - குரூப் பி பதவியில் 5
இடங்களும், ஏ.எஸ்.ஐ.,(பார்மஸிஸ்ட்)-குரூப் சி பிரிவில் 35 இடங்களும், ஏ.எஸ்.ஐ.,(ஓ.டி., டெக்னீசியன்) - குரூப் சி பிரிவில் 9 காலி இடங்களும் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள் : பி.எஸ்.எப்.,பில் மேற்கண்ட பதவிகளுக்கான அதிக பட்ச வயது ஸ்டாப் நர்ஸ் பிரிவுக்கு 30 ஆகவும், இதர இரண்டு பிரிவுகளுக்கும் 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு நர்ஸிங் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்து மத்திய அல்லது மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பார்மஸிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு பார்மஸியில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆப்ப்ரேஷன் டெக்னிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே போல் பிளஸ் 2 படிப்பு முடித்து அதன் பின்னர் ஓ.டி.,யில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்த பட்சம் 165 செ.மீ.,ரும், பெண்கள் 150 செ.மி.,யும் பெற்றிருக்க வேண்டும். முழுமையான உடல் தகுதிகளை இணைய தளத்தைப் பார்த்து அறியவும்.
வேறு என்ன விபரங்கள்?: பி.எஸ்.எப்.,பின் துணை மருத்துவ பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான டி.டி.,யை 15 மண்டலங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பயோ-டேட்டா படிவம் ஆகியவற்றையும் தேர்ந்து எடுக்கும் மண்டல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முழு விபரங்களை பின்வரும் இணையதளத்தில் அறியவும்.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் : 14.07.2013
இணையதள முகவரி: http://bsf.nic.in/doc/recruitment/r49.pdf

No comments:
Post a Comment