வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகள் - HINDUSTAN PETROLEUM CORPN LTD RECRUITMENT 2013 JULY UPDATES

TAMILNADU EMPLOYMENT NEWS 
இந்தியாவில் இயங்கி வரும் பெட்ரோலிய நிறுவனங்களில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த துறை சார்ந்த சந்தைப் பங்கில் 20 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆபிசர் டிரெய்னிங் வகையிலான 2 பிரிவுகளில் உள்ள 39 காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் ஆபிசர் டிரெய்னி பதவிக்கு குவாலிடி கண்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ் பிரிவில் 27 காலி இடங்களும், எச்.ஆர்., எனப்படும் மனிதவள பிரிவில் 12 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணி இடங்களுக்கு

விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
குவாலிடி கன்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி., வேதியியலுக்கு இணையான முது நிலைப் படிப்பை அனலிடிகல், பிஸிக்கல், ஆர்கானிக் அல்லது இன்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எச்.ஆர்.,பி.எம்., அல்லது ஐ.ஆர்., போன்ற ஏதாவது ஒரு பிரிவில் 2 ஆண்டு முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது இதே பிரிவுகளில் சிறப்பு பெற்ற எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும். 
ஏனைய தகவல்கள்: இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் மேற்கண்ட பயிற்சி அதிகாரி பணி இடங்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டியிருக்கும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.535/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் சலான் வாயிலாக 32315049001 என்ற HPCL Powerjyothi அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் கட்டணம் செலுத்திய விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணைய தளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 16.07.2013
இணையதள முகவரி: www.hindustanpetroleum.com/Upload/En/UPdf/OOTHPCL.pdf

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...