tamilnadu employment news |
இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையின் பெருமைமிகு அடையாளமாக விளங்குவது எல்.ஐ.சி., தான். பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., 1956ல் நிறுவப்பட்டு கடந்த 56 ஆண்டுகளாக லாபகரமாக இயங்கி வருகிறது.
இத்துறையில் தனியார் நிறுவனங்களின் போட்டி ஆரம்பித்து 10 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் எல்.ஐ.சி., நிறுவனமே ஆயுள் காப்பீட்டுத் துறையின் அதிகபட்ச சந்தைப் பங்கு மதிப்பை தன்னிடம் கொண்டுள்ளது மற்றொரு சிறப்பாகும். இவ்வளவு பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனத்தின் தென்மண்டலத்தில் 1844 நேரடி விற்பனைப் பிரதிநிதிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்: எல்.ஐ.சி.,யின் டைரக்ட் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.06.2013 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
ஆங்கில மொழித்திறன்: கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் திறன் போன்றவை கூடுதல் முன்னுரிமை பெறத் தகுதி உடையவை ஆகும். அடிப்படையில் இந்தப் பதவி மார்கெடிங் தொடர்புடைய பதவி என்பதால் நல்ல தகவல் பரிமாற்றத் திறன், மனிதர்களுடன் சிறப்புடன் பழகும் தன்மை, விற்பனைத் திறன், குறிப்பிட்ட இலக்குகளை கால வரையறைக்குள் எட்டுதல் போன்றவை இந்தப் பதவியின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.
இதர தகவல்கள்: எல்.ஐ.சி.,யின் டி.எஸ்.இ., பணி இடங்கள் கோட்ட வாரியாக நிரப்பப்படலாம் என்று தெரிகிறது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ ஏதாவது ஒரு எல்.ஐ.சி., கிளையில் ரொக்கமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரண்டு கட்ட தேர்ச்சி முறையை எதிர்கொண்டு இந்தப் பதவியைப் பெற முடியும்.
இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். எல்.ஐ.சி.,யின் நேரடி விற்பனைப் பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கப்பட்டால் செயல்பாட்டிற்கு ஏற்ப மாத ஊதியம் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்திலிருந்தோ அல்லது அருகிலுள்ள எல்.ஐ.சி., கிளையின் மூலமாக அறியலாம்.
கட்டணம் செலுத்த இறுதி நாள் : 06.07.2013
ஆன்-லைன் பதிவு செய்ய இறுதி நாள் : 07.07.2013
இணையதள முகவரி: www.licindia.in
No comments:
Post a Comment