இந்தியாவின் எரிசக்தி நிறுவனங்களுள் மிகவும் பிரம்மாண்டமானதும், பிரசித்தி பெற்றதுமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் 1975ல் நிறுவப்பட்டது. உலக அளவில் இந்த நிறுவனம் 317ஆவது போர்ப்ஸ் குளோபல் 2000 நிறுவனமாக கடந்த 2009ல் தேர்வு செய்யப்பட்டது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் 27 எக்ஸிக்யூடிவ் டிரெய்னிக்களைப் பதவியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: என்.டி.பி.சி., யின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு சி.ஏ., மற்றும் ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களே விண்ணப்பிக்க முடியும். இந்த ஆண்
டு 01.09.2013க்குள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருப்பவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது அவசியம். இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஆன்-லைன் எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற வேண்டும்.
மற்றவை: என்.டி.பி.சி.,யின் பயிற்சி அதிகாரி பதவிக்கு சென்னை உள்ளிட்ட நாட்டின் 7 மையங்களில் ஆன்-லைன் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணல் என்ற நிலைகளையும் வெற்றிகரமாக கடக்க வேண்டும். மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 08.07.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 04.08.2013
இணையதள முகவரி: http://ntpccareers.net/index.php

No comments:
Post a Comment