AIIMS - எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 831 நர்ஸ் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்படும் எய்ம்ஸ் மையத்தில் தற்போது ஸ்டாப் நர்ஸ் உள்பட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 878 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஸ்டாப் நர்ஸ் கிரேடு–1 பணிக்கு 231 பேரும், ஸ்டாப் நர்ஸ் கிரேடு 2 பணிக்கு 600 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பணியின் பெயர் – பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 1) – 231 பேர்
ஸ்டாப் நர்ஸ் ( கிரேடு 2) – 600 பேர்
ஹாஸ்பிடல் அட்டன்ட் (கிரேடு 3) – 40 பேர்
லைபிரேரியன், அசிஸ்டன்ட் (என்.எஸ்), பி.ஏ. பார் பிரின்சிபல்(எஸ்), லோயர் டிவிசன் கிளார்க்,டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு ஏ), கேஷியர் ஆகிய பணிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வயது வரம்பு
31–7–13 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 2) பணிக்கும், இதர பணிகளுக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் கிரேடு 1 நர்சிங் பணிக்கும், மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன், ஜெனரல் நர்சிங் படித்தவர்கள் கிரேடு 2 நர்சிங் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இதர பணிகளுக்கு பணி சார்ந்த பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு தகுதியாக கோரப்பட்டுள்ளது.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடைசி தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31–7–13
மேலும் விரிவான விவரங்களை அறிய http://aiimspatna.org என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்
No comments:
Post a Comment