வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013 May


தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள SSR பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. படிக்கும் போதே நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக முகாமில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. SSR பாலிடெக்னிக் மற்றும் SJTCS Staff Solutions நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 400 பேருக்கு, இந்த முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளது உற்சாகம் தரும் அனுபவம் என்கின்றனர் மாணவர்கள்

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பிரிவில் பல்வேறு பணிகள் 2013


இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பிரிவில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. பொறியியல் மற்றும் கலைப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கணினி, கட்டடக் கலை, உணவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் 80 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர Economics, History, Political Science, Psychology, Chemistry, Chinese, Arabic உள்ளிட்ட பட்டப் படிப்புகளை முடித்தவர்களுக்கு ராணுவத்தின் கல்விப் பிரிவில் 20 காலிப் பணியிடங்கள் உள்ளன.

Bureau of Indian Standards-ல் அலுவலக மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பணிகள் 2013


மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் BIS எனப்படும் Bureau of Indian Standards அமைப்பில், அலுவலக மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உதவியாளர் பணிக்கு 17 காலிப் பணியிடங்கள், Hindi Junior Translator பணிக்கு இரண்டு பணியிடங்கள், Lower Division Clerk பணிக்கு 46 இடங்கள், Junior Stenographer பணிக்கு 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றைத் தவிர, கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மைக்ரோ பயாலஜி ஆகிய பிரிவுகளில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 97 காலிப் பணியிடங்கள் உள்ளன.
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, மொகாலி உள்ளிட்ட நகரங்களில் உள்ள BIS சோதனைச் சாலைகளில் பணியில் அமர்த்தப்படலாம். இதர பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை, பெங்களூரு, சண்டிகர், கான்பூர், போபால், டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் உள்ள BIS அலுவலங்களில் இருக்கும் காலிப் பணியிடங்களில் அமர்த்தப்படுவர்.
அடிப்படைத் தகுதிகள்;

TNPSC Questions Free Download 2013 - 2014 PART 12

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
141. 'இடியோசை கேட்ட நகம் போல'  என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = அச்சம் 

142.  ' அனலில் விழுந்த புழு போல'  என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = துன்பம் 
143.  'தாமரை இலை தண்ணீர் போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = பற்று அற்று இருத்தல்
144.  'அச்சில் வார்த்தார் போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் =  உண்மைத் தோற்றம் 
145.  நின்றனன் அவ்வழி நிகழ்ந்த தென்னெனில்
துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் - சீர்மோனையைச் சுட்டுக
நின்றனன் - நிகழ்ந்த 
146. பாரதப் பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர்: இந் நினைவகற் றாதீர்! - சீர்மோனையைச் சுட்டுக
பாரதப் - பழம்பெரும்
147.  பனித்த சடையும் பவளம் போல்
மேனியிற்பால் வெண்ணீறும் - அடி எதுகையச் சுட்டுக.
 பனித்த - மேனியிற்பால்
148. பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் - மோனையைத் தேர்க
பொன்புனை - பொற்கழல்

149. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் - இயைபினைக்
கண்டறிக.
துப்பார்க்குத் - துப்பார்க்குத்

TNPSC Questions Free Download 2013 - 2014 PART 11

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
121.  'படி' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் = படித்தல்

122.  'வாழ்' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = வாழாதார்

123.  'ஆற்று' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = ஆற்றாரும்

124.  'வெல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் = வென்று 

125.  அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அன்பு, எருது, ஐவர், ஓசை 

126. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
வசை, வழக்கு, வாழ்வு, வானம்

127.  அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
எட்டு, எருது, எழில், ஏணி 

128. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
மலை, மீதி, முரசு, மூங்கில் 

129. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...