வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பிளஸ்–2 படித்தவர்களுக்கு கப்பல்படையில் பயிற்சியுடன் பணி | nausenabharti.nic.in recruitment June Updates

கப்பல் படையில் பிளஸ்–2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி காத்திருக்கிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய கப்பல் படையில், பல்வேறு பணிகளுக்கும் தகுதியானவர்களை குறிப்பிட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து பயிற்சி அளித்து பணி நியமனம் செய்கிறார்கள். தற்போது சாய்லர் எனப்படும் மாலுமி பணிக்கு 12–ம் வகுப்பு படித்தவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் 16–6–13 தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கான தகுதி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : கோர்ஸ் கமென்சிங் பிப்ரவரி 2014
பணியின் பெயர் : சாய்லர் (எஸ்.எஸ்.ஆர். – 01/2014 பேட்ஜ்)

முப்படை அதிகாரி பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு | UPSC Recruitment 2013 June Updates

முப்படை அதிகாரி பணியிடங்களுக்கு 509 பேர் யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் உயரதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்குத் தனித் தேர்வு நடத்துவது போலவே, இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு தகுதியான வர்களை தேர்வு செய்யவும் ஒருங்கிணைந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தற்போது ‘காம்பைன்டு டிபென்ஸ் சர்வீசஸ் எக்ஸாமினேசன்(2)–2013’ எனும் தேர்வை நடத்தி முப்படைகளுக்குத் தகுதியான 509 பேரை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. 24–6–13 தேதிக்குள்ளாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வின் பெயர் : காம்பைன்டு டிபென்ஸ் சர்வீஸ் எக்ஸாமினேசன்(2) – 2013

துணை ராணுவ படையில் 766 வேலைவாய்ப்புகள் | Sashastra Seema Bal Recruitment 2013 June Notifications

இந்திய துணை ராணுவத்தில் 766 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12–ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்று சஸாஸ்திரா சீமா பால். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கீழ் இயங்கும் இந்த படைப் பிரிவிற்கு ‘டெலிகாம் கேடர் 2013–14’ பிரிவில் துணை சப்–இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 766 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
பணியின் பெயர் : டெலிகாம் கேடர் 2013–14
பணியிடங்களின் எண்ணிக்கை : 766

பட்டதாரிகளுக்கு வங்கியில் கிளார்க் வேலை | tamilnadumercantilebank recruitment 2013 June Notification

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கிளார்க் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கிகளில் ஒன்றாகும். தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது கிளார்க் பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

TNPSC GROUP-I : சங்க காலம் ஒரு பார்வை Exam Materials Free Download Part IV(சோழர் காலம் (கி.பி.10 - கி.பி.13))

சோழர் காலம் (கி.பி.10 - கி.பி.13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசுக்கும் சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வள நாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம்  அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடம் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

TNPSC GROUP-I : சங்க காலம் ஒரு பார்வை Exam Materials Free Download Part I

கலை இலக்கியம்

சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன. சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக் கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளை யாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...