AIIMS - எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 831 நர்ஸ் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்படும் எய்ம்ஸ் மையத்தில் தற்போது ஸ்டாப் நர்ஸ் உள்பட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 878 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஸ்டாப் நர்ஸ் கிரேடு–1 பணிக்கு 231 பேரும், ஸ்டாப் நர்ஸ் கிரேடு 2 பணிக்கு 600 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பணியின் பெயர் – பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 1) – 231 பேர்
ஸ்டாப் நர்ஸ் ( கிரேடு 2) – 600 பேர்


