இந்திய ஒலிபரப்பு கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர்வதற்கான தேர்வை, SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
புரோகிராம் எக்சிகியூட்டிவ் மற்றும் டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 1166 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் புரோகிராம் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு 360 பேரும், டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் பணிக்கு 806 பேரும், டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் Production Assistant பணிக்கு 72 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படுவோர் பிரசார் பாரதி நிறுவன அலுவலங்களில் பணியில் அமர்த்தப்படுவர். கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். கூடுதல் விவரங்களைப் பெற www.ssconline2.com என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
புரோக்ராம் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு, எம்.ஏ., எம்.எஸ்.சி., படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இலக்கியம், நாடகக்கலை, டிபேட்டிங் ஆக்டிவிட்டிஸ், பப்ளிகேஷன்ஸ், பாப்புலர் சயின்ஸ் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் சான்றிதழ் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். இது தவிர காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல மொழியறிவும் அவசியம்.
அல்லது இளநிலைப் படிப்புடன், நாடகக் கலை, இயக்கம்,